×

கனமழை மற்றும் பாறைகள் சரிவால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை: 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்

உதகை: மழை மற்றும் பாறைகள் சரிவால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உதகை மலைரயில் சேவை 5 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயிலில் பயணிப்பதற்காகவே அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிப்பது வழக்கம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடந்த நவம்பர் 3 ஆம் தேதி கல்லாறு ரயில் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது . அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் ரயில்பாதை சீரமைப்பு பணிகள் காரணமாகவும் மலை ரயில் இயக்கப்படாமல் இருந்தது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் மழையும் குறைந்துள்ளதால் மலை ரயில் சேவை தொடங்கியது. 5 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அதில் பயணித்தனர். அனைவரும் மலைரயிலில் சென்றபடி இயற்கை அழகை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

The post கனமழை மற்றும் பாறைகள் சரிவால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை: 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Utagai ,Utagai Mountain Railway ,Mettupalayam ,Udagai ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து...