×

ரூ.70 லட்சம் மதிப்பில் நடைபெற்ற மகா ரத புனரமைப்பு பணி: திருத்தேர் வெள்ளோட்டம் விமரிசையாக நடைபெற்றது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள அண்ணாமலையார்கோவில் மகாரதத்தின் வெள்ளோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகர தீபமும் ஏற்றப்படுகிறது.

குறிப்பாக டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் உலா நடைபெற உள்ளது. பெரிய தேர் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், மகாரதத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் புனரமைத்துள்ளனர். 59 அடி உயரமும் 200டன் எடையும் கொண்ட இந்த பிரமாண்ட தேர் 70 லட்சம் செலவில் புதுப்பிக்கபட்டுள்ளது.

புனரமைப்பு பணி நிறைவுற்றதை அடுத்து மகாரதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா வெள்ளோட்டமாக கோலாகலமாக நடைபெற்றது. தேருக்கு முன்பாக மாணவிகள் பரதநாட்டியம் ஆடியவாறு வளம் வந்தனர். மகாரதத்தில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் மற்றும் அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்த பகுதிகள் மாற்றப்பட்டு பிரம்மா மற்றும் வாரபாலகர் சிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பெரிய தேரில் 470 சிலைகள் இருந்த நிலையில் தற்போது புதிதாக 203 சிலைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மகா ரதவெள்ளோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

The post ரூ.70 லட்சம் மதிப்பில் நடைபெற்ற மகா ரத புனரமைப்பு பணி: திருத்தேர் வெள்ளோட்டம் விமரிசையாக நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Thiruther Vellottam ,Tiruvannamalai ,Maharadath ,Annamalaiyar Kovil ,Karthikai Dipa festival ,Annamalaiyar ,Bharani Deepam ,
× RELATED திருவண்ணாமலை தீபமலை உச்சியில் ஜோதி...