×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு வருகை

புதுக்கோட்டை, நவ.8: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு வருகை தர உள்ளது என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வருகை தர உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், கலெக்டர் அருணா, தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு (2024-2025) குழு (19ம்தேி) செவ்வாய்க்கிழமையன்று வருகை தந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு செய்யும் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து,

புதுக்கோட்டை மாவட்ட செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்யப்பட்டு பெறப்பட்ட மனுக்களில் குழு தெரிவு செய்த மனுக்கள் மீதான பதிலறிக்கைகளை ஆய்வு செய்திட உள்ளது. அதன்படி, இன்றையதினம் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் அன்று அவர்களுக்கு தேவையான வாகன வசதி, இருப்பிட வசதிகள் குறித்தும், ஆய்வு செய்யும் பணிகளின் முன்னேற்பாடுகள் குறித்தும், ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத் தலைவர் அரசு தலைமைக் கொறடா ராமசந்திரன், உறுப்பினர்கள் கந்தசாமி, சங்கர், சின்னப்பா, சுந்தரராஜன், சௌந்தரபாண்டியன், பாபு, மதியழகன், ராமச்சந்திரன், ஜெகன்மூர்த்தி, ஜோதி, செயலக முதன்மைச் செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் சாந்தி, துணைச் செயலாளர் உஷா, சார்புச் செயலாளர் சந்தானம் ஆகியோர் வருகை புரிய உள்ளார்கள். எனவே அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் மனுக்கள் மீதான பதிலறிக்கைகளை தயார் நிலையில் வைத்திடவும், உரிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) கௌதம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு வருகை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly Petitions Committee ,Pudukottai District ,Pudukottai ,Collector ,Aruna ,Pudukottai District Collector ,Office ,District ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே தனியார் பள்ளி வாகன விபத்து: 25 மாணவர்கள் காயம்