×

சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் ஆமிர்கான்

மும்பை: சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை ஆமிர்கான் வெளியிடுவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள படம் அயலான். இதில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ், ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஏலியன் ஒன்று பூமிக்கு வந்து சிவகார்த்திகேயனுடன் நட்பாவதுதான் இந்த படத்தின் கதையாகும். இதில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் என்பதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிலேயே படக்குழு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தை தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பைக்கு சென்ற சிவகார்த்திகேயன், ஆமிர்கானை சந்தித்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அப்போது அயலான் படத்தை பற்றி அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆமிர்கானின் தயாரிப்பு நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் அயலான் படத்துக்காக சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இந்தியில் வெளியிட ஆமிர்கானின் பட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதனாலேயே இதை அவரது பட நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளதாம்.

The post சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் ஆமிர்கான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aamir Khan ,Sivakarthikeyan ,Mumbai ,Ayalan ,Ravikumar ,Rahul Preet Singh ,Isha Gobikar ,Yogi Babu ,Karunakaran ,AR Rahman ,KJR Studios ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தேர்தலின்போது ‘டீப் பேக்’...