×

‘அதிமுக மாஜி அமைச்சரால் உயிருக்கு ஆபத்து’

வேலூர்: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மதிவாணனிடம் காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்த ரிஷிக்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் நான் பார்க்கிங் நடத்தி வருகிறேன். இந்த இடம் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த பிரம்மானந்தா தாண்டா மற்றும் சேகர் ரெட்டி ஆகிய இருவருக்கும் சொந்தமானது. இந்நிலையில் இன்று (நேற்று) அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பார்க்கிங் இடத்தை மாலை 6 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்று மிரட்டினார்.

நான் சேகர்ரெட்டி மற்றும் பிரம்மானந்தா தாண்டா ஆகிய இருவரும் அறிவுறுத்தி தான் நான் இந்த பார்க்கிங் நடத்தி வருகிறேன். ஆனால் தற்போது திடீரென முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்னை மிரட்டி வருகிறார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

The post ‘அதிமுக மாஜி அமைச்சரால் உயிருக்கு ஆபத்து’ appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vellore ,Rishikumar ,VG Rao town ,SP Madhivanan ,Vellore SP ,Vellore New Bus Station ,Brahmananda ,Andhra Pradesh ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...