×

தமிழக மருத்துவத் துறை குறித்து எதிர்கட்சி தலைவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் 3 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் இதுவரை 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் என்று சொல்லக்கூடிய எம்ஆர்பி மூலம் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு மொத்தம் 18,460 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. மேலும் 2553 உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 23,917 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். தேர்வு முடிந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து 2553 பேருக்கு பணிஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் வழங்க உள்ளார்.

சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராக இருப்பது வருத்தமாக இருக்கிறது. அவர் நேற்றை அறிக்கையில் சொல்லியிருப்பது 14 மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, காலியாக இருக்கின்றது என்று சொல்லியிருக்கிறார், 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றது. அதில் 14 மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் 4 மாதம் கால இடைவெளியில் ஓய்வு பெற்றார்கள்.

ஓய்வு பெற்றதையடுத்து புதிய முதல்வர்களுக்கு பணிஆணைகள் வழங்கப்பட்டு அக்டோர் 3ம் தேதியே பணியில் சேர்ந்து விட்டார்கள்.  கடந்த 10 வருடங்களில் டெங்கு இறப்பு குறைவாக உள்ளது. இதுகூட தெரிந்துக் கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுவது ஏற்புடையது தானா என்று தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் கேட்டுக் கொள்வது, இந்த துறை மீது நேருக்கு நேர் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழக மருத்துவத் துறை குறித்து எதிர்கட்சி தலைவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian Sawal ,Chennai ,M. Subramanian ,Rajiv Gandhi Government General Hospital ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...