×

நடிகர் விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாது: ரஜினி அண்ணன் சத்யநாராயணா பரபரப்பு பேட்டி

சென்னை: நடிகர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் கூறினார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், இதுபற்றி நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவிடம் மதுரையில் நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘வரட்டும் வரட்டும். கமல்ஹாசன் பண்ணியது போல் அவரும் பண்ணட்டும். எல்லாருக்கும் உரிமை உள்ளது. எந்த பிரயோஜனமும் இல்லை. ஒன்றும் சாதிக்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது எல்லாம் தமிழ்நாட்டில் முடியாது. விஜய் இப்போது ஆசைப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் அவர் ஜெயிப்பது ரொம்பவே கஷ்டம்’. இவ்வாறு அவர் கூறினார்.

The post நடிகர் விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாது: ரஜினி அண்ணன் சத்யநாராயணா பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Rajini ,Satyanarayana ,Chennai ,Rajinikanth ,Satyanarayana Rao ,Tamil Nadu ,Victory Kazhagam ,Madurai ,
× RELATED விஜய் ரசிகர்களிடம் ராஷ்மிகா மன்னிப்பு