- சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டை
- அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டை
சென்னை: தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மூலம் சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டை கிளை அச்சகங்களில் 9255 பேருக்கு பெயர் திருத்தம் அல்லது பெயர் மாற்றம் செய்ததன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் ரூ.54 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வெளியிட்ட அறிக்கை:சென்னையில் இத்துறையின் ஆணையரகத்தில் மட்டும் செயல்பட்டு வந்த பெயர் மாற்றம் குறித்த அலுவலகம் மதுரை மற்றும் திருச்சியில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் செயல்பட்டு வரும் அரசு வெளியீடுகள் துணை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் சேலம், புதுக்கோட்டை மற்றும் விருத்தாசலம் ஆகிய கிளை அச்சக அலகுகளில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு 26.4.2023 முதல் செயல்பட்டு வருகிறது.
சேலம், புதுக்கோட்டை மற்றும் விருத்தாசலம் ஆகிய கிளை அச்சகங்களில் 26.4.2023 முதல் 30.9.2024 வரையிலான காலத்தில் 9255 பயனாளிகளில் தமிழில் 997 மற்றும் ஆங்கிலத்தில் 8258 பயனாளிகள் பெயர் திருத்தம் / பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டதன் மூலம் அரசிற்கு ரூ.54,41,857/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
The post அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மூலம் சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டை கிளை அச்சகங்களில் 9255 பயனாளிகளுக்கு பெயர் திருத்தம்: ஓராண்டில் ரூ.54 லட்சம் வருவாய் appeared first on Dinakaran.