×
Saravana Stores

மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை எதிரொலி; வேகமாக நிரம்பும் பெரியகுளம் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சி


ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியான மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மழை பெய்தது. இதன் காரணமாக மலை அடிவார பகுதியில் உள்ள அருவிகள், நீர் ஓடைகள் ஆகியவற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

அவ்வாறு மறுகால் பாய்ந்த தண்ணீர் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய்க்கு வந்து சேர்ந்தது. இதனால் பெரியகுளம் கண்மாய் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை எதிரொலி; வேகமாக நிரம்பும் பெரியகுளம் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சிகண்மாய் தற்போது அதிகளவு தண்ணீருடன் கடல்போல் காட்சியளிக்கிறது. பெரியகுளம் கண்மாயை நம்பி சுமார் 1000 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை எதிரொலி; வேகமாக நிரம்பும் பெரியகுளம் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Periyakulam Kanmai ,Srivilliputhur ,Periyakulam ,
× RELATED மாஞ்சோலையில் இருந்து நெல்லை வந்த அரசு...