×

கோடநாடு வழக்கு; எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு!

சென்னை: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தடை விதித்து ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டி அளித்திருந்தார். கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை கோரியும் மான நஷ்ட ஈடு கோரியும் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

 

The post கோடநாடு வழக்கு; எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Godanadu ,Tanabal ,Edapadi Palanisami ,Chennai ,Kanakaraj ,Kodanadu ,High Court ,Palanisami ,
× RELATED நீதிமன்ற வாயிலில் நடந்த கொலையை...