×

2024 ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிப்பு..!!

சென்னை: 2024 ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2024 ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும். கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (8.11.2024) தலைமைச் செயலகத்தில் வழங்கி சிறப்பிக்கிறார். இவ்விருதுடன், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையும் முனைவர் மா. செல்வராசனுக்கு வழங்கப்பட உள்ளது.

The post 2024 ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Selvarasan ,Chennai ,Karunanidhi Chemmoizhi ,M. Karunanidhi Semmoizhi ,Central Institute of Semmoshya Tamil Translation ,M. Karunanidhi Semmozhit ,Karunanidhi ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...