×

எடப்பாடியுடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு


சென்னை: தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் அப்துல் கரீம், மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். சந்திப்பின்போது வக்பு வாரிய திருத்தச் சட்டம் குறித்த தங்களது குறைகளையும், தங்களுடைய கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

வக்பு வாரிய சட்டத்தில் தேவையில்லாத திருத்தங்களைக் கொண்டு வரும் இம்மசோதாவிற்கு, மாநிலங்களவையில் மீண்டும் ஓட்டெடுக்கும் சூழல் வந்தால் அதிமுக கட்சியின் 4 உறுப்பினர்களும் ஓட்டெடுப்பை புறக்கணிக்காமல் மசோதாவை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொருளாளர் இப்ராஹிம், மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம், மாநில செயலாளர்கள் சித்திக், அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

The post எடப்பாடியுடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tawheed Jamaat ,Edappadi ,Chennai ,Tamil Nadu ,AIADMK ,General ,Edappadi Palaniswami ,State President ,Tawheed Jamaat Abdul Karim ,State General Secretary ,A. Mujibur Rahman ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 4...