டெல்லி: இந்திய உணவுக் கழகத்துக்கு கூடுதல் மூலதன நிதியாக ரூ.10,700 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் உணவுப் பொருள் கொள்முதலில் இந்திய உணவுக் கழகம் முக்கிய பங்காற்றி வருகிறது என்ஸ் என ஒன்றிய அமைச்சர் ஆஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் உணவு தானியத்தை எஃப்.சி.ஐ. கொள்முதல் செய்தது. எஃப்.சி.ஐ. பணியை விரிவுபடுத்தும் வகையில் அதன் மூலதனத்தை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
The post இந்திய உணவுக் கழகத்துக்கு கூடுதல் மூலதன நிதியாக ரூ.10,700 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.