×

18,000 போலி நிறுவனம் மூலம் ரூ.25,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் சுமார் 25,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள போலி நிறுவனங்களுக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்த நடவடிக்கையில், எந்த வர்த்தகத்திலும் ஈடுபடாமல் உள்ளீட்டு வரி திரும்பப் பெறுதலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட 73,000 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இவற்றில் சுமார் 18,000 நிறுவனங்கள் போலி என்பது தெரிய வந்தது. மேலும், அந்நிறுவனங்கள் சுமார் ரூ.24,550 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த சிறப்பு நடவடிக்கையின்போது நிறுவனங்கள் ரூ.70 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்தின என்று ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post 18,000 போலி நிறுவனம் மூலம் ரூ.25,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Goods and Services Tax ,Dinakaran ,
× RELATED 55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக...