×
Saravana Stores

முட்செடிகள் மண்டிக்கிடக்கும் அமராவதி ஆறு

 

கரூர், நவ. 6: அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் ராஜபுரம் பகுதியில் இருந்து கரூர் வழியாக அமராவதி ஆறு பயணிக்கிறது. இந்த ஆறு கரூரின் பல்வேறு பகுதிகளின் வழியாக பயணித்து, திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில், அமராவதி ஆற்றில் செட்டிப்பாளையம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இநத பகுதியில் இருந்து கரூர் நோக்கி வரும் அமராவதி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு முட்செடிகள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த புதர்செடிகள் காரணமாக தண்ணீரின் போக்கும் பாதிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுககு முன்பு அமராவதி ஆற்றில் வளர்ந்துள்ள முட்செடிகள் அனைத்தும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதுபோன்ற பணிகள் மேற்கொள்ளாததால் திரும்பவும் அமராவதி ஆற்றில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. எனவே, போர்க்கால அடிப்படையில் அகற்றவேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள செடி கொடிகளை விரைந்து அகற்ற வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.

 

The post முட்செடிகள் மண்டிக்கிடக்கும் அமராவதி ஆறு appeared first on Dinakaran.

Tags : Amaravati river ,Karur ,Rajapuram ,Karur district ,Amaravati ,
× RELATED காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட வேண்டும்: