×
Saravana Stores

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கரூர் மாநகரில் இரவில் குடிநீர் விநியோகம்: முறைப்படுத்த கோரிக்கை

கரூர், நவ. 11: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் இரவில் குடிநீர் விநியோகம் செய்வதால் பெரும்பாலான மக்கள் அதனை பயன்படுத்திட முடியாத நிலை ஏற்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் காவிரி ஆறு பயணிக்கும் நெரூர், வாங்கல் மற்றும் கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் பகல் நேரங்களிலும், சில பகுதிகளில் நள்ளிரவிலும் சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கரூர் நகரம் தொழில் நகரம் என்பதால் பெரும்பாலானோர் வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்நிலையில், இவர்கள் வீடு திரும்பி தூங்கிக் கொண்டிருக்கும் போது, பொதுகுழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதி குடியிருப்புகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி வசதி இல்லை. இதனால், விநியோகம் செய்யப்படும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இரவு நேரங்களில், குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் தாந்தோணிமலை போன்ற சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் அதிகளவு சிரமப்பட்டு வருகின்றனர். இதனை குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த, அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கரூர் மாநகரில் இரவில் குடிநீர் விநியோகம்: முறைப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur Managar ,Tamil Nadu Minority Economic Development Corporation ,Karur ,Karur Municipality ,Kaviri ,Nerur ,Wangal ,Dinakaran ,
× RELATED காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட வேண்டும்: