×

மேலூர் அருகே எட்டிமங்கலத்தில் அங்கன்வாடி வளாகத்தில் தேங்கிய மழைநீர்: உடனடியாக அகற்ற கோரிக்கை

மேலூர், நவ. 6: மேலூர் அருகே அங்கன்வாடி வளாகத்தை சுற்றி தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொட்டாம்பட்டி ஒன்றியம் எட்டிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜபுரத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி உள்ள இந்த நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தேங்கிய நீரை வெளியேற்றி, தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேலூர் அருகே எட்டிமங்கலத்தில் அங்கன்வாடி வளாகத்தில் தேங்கிய மழைநீர்: உடனடியாக அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Ettimangalam ,Melur ,Anganwadi complex ,Children's Anganwadi Center ,Sundararajapuram ,Ettimangalam Panchayat of ,Kottampatti Union ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்