×

கிராமங்களில் அதிகரிக்கும் திருட்டுகள் போலீசார் ரோந்துப் பணியை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை

பழநி, நவ. 6: பழநி பகுதி கிராமங்க ளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் போலீசார் ரோந்துப்பணியை அதிகரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயில் உள்ள பழநி சரகத்தில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இச்சரகத்தில் டவுன், அடிவாரம், மகளிர், போக்குவரத்து, ஆயக்குடி, சத்திரப்பட்டி, தாலுகா, கீரனூர், சாமிநாதபுரம், மதுவிலக்கு என 10 காவல் நிலையங்கள் உள்ளன. குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டு வந்தனர். பழநி சரகத்தில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் ஒன்றான பாலசமுத்திரம் பேரூராட்சியில் காவல் நிலையம் இல்லை.

இந்நிலையில் பாலசமுத்திரம் பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகளவு நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளன. வீடுகளின் வெளிப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக், கார் போன்ற வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுதல், விவசாயி பணிகளுக்காக வைத்திருக்கும் விவசாயிகளின் டிராக்டர் போன்றவைகளில் இருக்கும் விலை உயர்ந்த பேட்டரி, ஷாப்ட் போன்றவற்றை திருடும் சம்பவம் அதிகளவு நடந்து வருகிறது. எனவே, போலீசார் காவல் நிலையம் இல்லாத இதுபோன்ற பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிராமங்களில் அதிகரிக்கும் திருட்டுகள் போலீசார் ரோந்துப் பணியை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,Thandayuthapani Swamy Temple ,Tamil Nadu ,
× RELATED பழநி மூலிகை பூங்கா பயன்பாட்டிற்கு வருமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு