×
Saravana Stores

ஆவடி – சென்ட்ரல் புதிய ரயில் சேவை

சென்னை, நவ.6: ஆவடி – சென்னை சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் சேவை இன்று (6ம் தேதி) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரயில், மாலை 6.10 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு மாலை 6.55 மணிக்கு வந்தடையும். இதேபோல், சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையே இரு மார்க்கமாக 9 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ரயில் 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி, இன்று முதல், இரு மார்க்கமாகவும் 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்கப்படும். சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையே அரக்கோணம் வழியே மெமு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக இந்த ரயில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை – சென்னை கடற்கரை மெமு ரயில் நாளை முதல் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. சென்ட்ரல் – ஆவடி இடையே மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதனை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பயணிகள் வசதிக்காக இந்த வழித்தடத்தில் இன்று முதல் புதிய மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது.

The post ஆவடி – சென்ட்ரல் புதிய ரயில் சேவை appeared first on Dinakaran.

Tags : Avadi – Central New Train Service ,Chennai ,Avadi ,Chennai Central ,Dinakaran ,
× RELATED சென்னை கடற்கரையில் சரக்கு ரயில் வேகன் தடம் புரண்டது