×
Saravana Stores

இளைஞருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமின்


மதுரை: செல்போன் திருட்டு வழக்கில் கைதான 19 வயது இளைஞருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஒரு இளைஞன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட உடன், போலீசார் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறான். பின்னர் ஒரு கூட்டத்திற்கு தலைவனாகி சமூகத்திற்கே தொல்லையாக மாறிவிடுகிறான். இதுதான் நம் நாட்டின் நடைமுறையாக உள்ளது. முதல் முறை குற்றங்களில் ஈடுபடுவரை சீர்திருத்த சென்னையில் உள்ள ‘பாதை’ போன்ற அமைப்பு மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். கைதான இளைஞர் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஜாமின் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, மதுரை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி தினசரி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளார்.

The post இளைஞருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமின் appeared first on Dinakaran.

Tags : Maduraik High Court ,Madurai ,Madurai High Court ,Dinakaran ,
× RELATED பன்றிகளை திருடி விற்பனை செய்தவருக்கு முன்ஜாமீன்