×
Saravana Stores

விளையாட்டு போட்டியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒத்திக்காடு ஏரியில் கடந்த 2020 டிசம்பர் மாதம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட போது பந்து தாக்கி லோகநாதன் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது தந்தை தாமோதரன் அளித்த புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்திருந்த ராசு மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கு எதிராக புல்லரம்பாக்கம் போலீசார், கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராசு மற்றும் ஐயப்பன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பலியான இளைஞர் லோகநாதனின் தந்தை தாமோதரன் நேரில் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லோகநாதன் தாமாக முன்வந்து விளையாட்டில் பங்கெடுத்திருக்கிறார். கார்க் பந்து தாக்கியதில் லோகநாதன் மரணம் அடைந்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் கார்க் பந்து பயன்படுத்த எந்த தடையும் இல்லை.

கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கோ ஏற்பாட்டாளர்களுக்கோ லோகநாதனுக்கு மரணம் ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை. எனவே, ராசு மற்றும் ஐயப்பன் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. பெற்றோருக்கு ஒரே மகனான லோகநாதனின் மரணத்திற்கு அவரது பெற்றோருக்கு திருவள்ளூர் மா வட்ட சட்ட பணிகள் ஆணை குழு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படும் மரணங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குவது தொடர்பான திட்டத்தை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை வகுக்க வேண்டும் என்று நீதிபதி ஆலோசனை தெரிவித்தார்.

The post விளையாட்டு போட்டியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Lokanathan ,Otikad Lake ,Thiruvallur district ,Damodaran ,Dinakaran ,
× RELATED மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை...