×
Saravana Stores

கிருஷ்ணகிரியில் திடீர் ஆய்வு; ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்: அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து அலுவலர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் தடையின்றி கொண்டு சேர்க்க வேண்டும்.

மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகள், குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எழுத, படிக்க தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார். தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி போன்ற திட்டங்களை மாணவர்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

The post கிருஷ்ணகிரியில் திடீர் ஆய்வு; ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்: அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Minister ,Anbil Mahesh ,Anbil ,Integrated School Education Project Office ,District Primary Education Office ,District Education Office ,Krishnagiri Government Boys High School Ground ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...