×

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நட தடை..!!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நடுவதற்கு தடை விதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர்
கோவில் உள்ளே அமைந்துள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கொடி மரம் மாற்றும் பணி நேற்று தொடங்கியது.

பூஜைகளுடன் இன்று காலை பணிகள் துவங்கியபோது பொது தீட்சிதர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். எந்த புனரமைப்பு பணிகளையும் செய்ய 15 நாட்களுக்கு தடைவிதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து நீதிபதியின் தடை உத்தரவை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழுவினர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கோவிலிலிருந்து வெளியேறினர். இதனால் நேற்று மலை முதல் தற்போது வரை சிதம்பரம் கோவில் நேரிட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

The post சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நட தடை..!! appeared first on Dinakaran.

Tags : Dilla Govindaraja Perumal Sanctuary ,Chidambaram Natarajar Temple Complex ,Chidambaram ,Court ,Judge ,Karthikeyan ,Chidambaram Natarajar Temple ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோபுர சிலைகள் உடைந்தது