- முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா
- பூ பாலக்கு
- முத்துபேட்டை
- 723வது ஆண்டு பிரமாண்டமான கந்தூரி விழா
- இறைவன் சேக்தாவுடு தர்கா
- ஜாம்புவானோட
- முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்
- இடும்பாவனம் கேசவன்
- நாதஸ்வரம் மங்கள்
- முத்துப்பேட்டை தர்கா காந்தூரி
- பூ பல்லக்கு ஊர்வலம்
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 723ம் ஆண்டு பெரிய கந்தூரிவிழா நேற்றிரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று அதிகாலை இடும்பாவனம் கேசவன் குழுவினர் நாதஸ்வரம் மங்கள இசையுடன் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக துவங்கியது. மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை சிறப்பு வழிபாடுகள் பிரார்த்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடந்தது.
கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், குதிரை, ஒட்டகங்கள், பேண்டு வாத்தியங்கள், தப்ஸ் கச்சேரி ஆகியவை ஊர்வலத்தில் இடம்பெற்றது. ஊர்வலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் பெரிய தர்காவை மூன்று முறை சுற்றியது. பின்னர் இரவு 9 மணிக்கு புனிதக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர். முக்கிய விழாவாக வரும் 12ம்தேதி நள்ளிரவு சந்தன கூடு வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.
The post முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா துவங்கியது: போலீஸ் பாதுகாப்புடன் பூ பல்லக்கு ஊர்வலம் appeared first on Dinakaran.