×

ராகுல், பிரியங்கா இன்று மீண்டும் பிரசாரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. அங்கு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி, இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சத்யன் மொகேரி மற்றும் பாஜ கூட்டணி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த மாதம் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பிரியங்கா காந்தி அங்கு பிரசாரம் செய்தார். இந்நிலையில் பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தியும் இன்று மீண்டும் வயநாட்டில் பிரசாரம் செய்கிறார். பிரியங்கா வரும் 7ம் தேதி வரை பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

The post ராகுல், பிரியங்கா இன்று மீண்டும் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Priyanka ,Thiruvananthapuram ,Kerala ,Wayanadu ,Congress ,Priyanka Gandhi ,Sathyan Mogheri ,Bajaa ,Nawya Haridas ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு