×
Saravana Stores

தீபாவளி தொடர் விடுமுறை; ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையால் இன்று ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால் அங்குள்ள ரவுண்டானா உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளதால் தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளன.

இதமான சீதோஷ்ண நிலை காணப்படும் நிலையில் சுற்றலாப்பயணிகள் ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று ரசித்தனர். சுற்றுலாப்பயணிகள் வருகையால் சாலையோரக் கடைகளில் விற்பனை அதிகமாக நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 20 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சி மற்றும் லேடீஸ், ஜென்ட்ஸ் சீட் பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

 

The post தீபாவளி தொடர் விடுமுறை; ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Diwali series ,Yartat ,YERAD ,SALEM ,YERADU ,Feeder of the Poor ,Adrat ,Diwali festival ,India ,Diwali ,Yerevan ,Dinakaran ,
× RELATED விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை...