×

தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணியிட மாற்றம்: வடக்கு மண்டல ஐஜி நடவடிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிவந்த தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரை பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 போலீசார் மீது வடக்கு மண்டல ஐஜிக்கு பல்வேறு புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த பார்த்திபன், திருவள்ளூர் நகர காவல்நிலைய தனிப்பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த பிரபாகரன், ஆரம்பாக்கம் காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ் அருணகிரி ஆகிய 3 பேரையும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

வெங்கல் தனிப்பிரிவு தலைமை காவலர் கமலநாதன், மப்பேடு தனிப்பிரிவு காவலர் கணேசன், ஆர்.கே. பேட்டை தனிப்பிரிவு காவலர் நடராஜன் ஆகிய 3 பேரையும் கடலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மீது தொடர் புகார் ஐஜிக்கு சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‘’தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாரிடமும் இலவச பரிசு பொருட்கள் பெற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

The post தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணியிட மாற்றம்: வடக்கு மண்டல ஐஜி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Northern Zone IG ,THIRUVALLUR ,NORTHERN ZONE IG ASRA CORK ,THIRUVALLUR DISTRICT ,Thiruvallur District Police SP Office ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!