- வடச்சிட்டூர்
- மயிலம் தீபாவளி
- வடசித்தூர் கிராமம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வடக்கு சித்தூர் கிராமம்
- கோவாய் மாவட்டம்
- குனடுகடவு உராடச்சி யூனியன்
- அமாவாசை
- கொங்கு ஆட்சியாளர் சமூகம்
கிணத்துக்கடவு : தமிழகத்திலேயே இரண்டு நாட்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் கிராமமாக வடசித்தூர் கிராமம் விளங்கி வருகிறது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்டது வட சித்தூர் கிராமம். இங்கு பெரும்பான்மையாக வாழும் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் அமாவாசை அன்று மாமிசம் உண்ண மாட்டார்கள். இதனால் ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி மறுநாள் கொண்டாட முடிவு செய்தனர்.
அன்றிலிருந்து தீபாவளிக்கு அடுத்த நாளை மயிலம் தீபாவளி என்கிற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.நூற்றாண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் மயிலம் தீபாவளி கொண்டாட்டத்தில் சாதிமத வேறுபாடின்றி அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக கலந்து கொள்வதால், இது சமூக நீதி திருவிழாவாக மாறிவிட்டது என்று கூறலாம்.மயிலம் தீபாவளியை முன்னிட்டு, வித விதமான ராட்டினங்கள் மட்டுமின்றி கிராமிய திருவிழாவில் இருக்கும் அனைத்து கடைகளும் போடப்பட்டு வருகிறது. இதனால் மயிலம் தீபாவளியை கொண்டாட வடசித்தூர் கிராமம் தயாராகி வருகிறது.
The post மயிலம் தீபாவளியை கொண்டாட தயாராகி வரும் வடசித்தூர் கிராமம் appeared first on Dinakaran.