- அஇஅதிமுக
- தீவார்
- எடப்பாடி
- ராமநாதபுரம்
- 117 வது ஜெயந்தி
- Gurupuja
- முத்துரமலிங்கதேவர் நினைவு
- பசும்பன்
- கமுதி, ராமநாதபுரம் மாவட்டம்
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- தின மலர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவையொட்டி நேற்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், அன்வர்ராஜா, காமராஜ், விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் டாக்டர் சரவணன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த உத்தமர் தேவர். நேதாஜி தலைமையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடி வெற்றி பெற்றார். அவர் சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுக்கு அஞ்சிதான் ஆங்கிலேய அரசு வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. பெரும் செல்வந்தரான அவர் தனது சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தேவர் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு புகழ் சேர்க்கப்பட்டது. 1994ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் தேவருக்கு முழு உருவ சிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். 2014ல் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு 13 கிலோ தங்க கவசம் அணிவித்தார்’’ என்றார். எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கையில் வைத்திருந்த துண்டுச் சீட்டை பார்த்து படித்தார். அப்போது பதற்றத்துடன் காணப்பட்டார்.
தேவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் சேர்த்தது குறித்து பேசும்போது, அதிமுக பெருமை சேர்த்தது என்பதற்கு பதிலாக இழிவு செய்தது என பேசினார். தேவருக்கு ஜெயலலிதா 2014ல் தங்கக் கவசம் அணிவித்தார் என்பதற்கு பதிலாக 1994ல் அணிவித்தார் என தவறுதலாக பேசினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூற விடாமல், எடப்பாடி கையை சுரண்டி, தீபாவளி வாழ்த்து கூறும்படி கூறி அழைத்து சென்றார்.
* துரோகி இபிஎஸ் என கோஷம்
எடப்பாடி மரியாதை செலுத்த வந்தபோது ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலாவுடன் வந்த தொண்டர்கள் சிலர், நினைவாலய பகுதியில் நின்றபடி, துரோகி இபிஎஸ் ஒழிக என கோஷமிட்டனர். எடப்பாடி வருவதற்கு முன்பு செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அரசு விளம்பரத்தில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் படங்களை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் சால்வையை கொண்டு மறைக்க முற்பட்டனர். இதனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
The post தேவருக்கு இழிவு செய்தது அதிமுக: எடப்பாடி பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.