×

அண்ணா பல்கலை மாஜி துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் மீது விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2013 ஆண்டுகளில் தற்காலிக துணைவேந்தராகவும் 2019 முதல் 2022 வரை துணைவேந்தராகவும் பணியாற்றியவர் காளிராஜ். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதாக கூறி மாணிக்கம் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஜூலை மாதம் புகார் அளித்திருந்தார். தனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி புகாரை விசாரித்து முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணிக்கம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆறு மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post அண்ணா பல்கலை மாஜி துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் மீது விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Kaliraj ,Chennai ,Manickam ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...