×

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களுக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடி அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டையை பெறுவதை பயணிகளுக்காக எளிமையாக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகளின் வசதியை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு வகையான பயண சலுகைகளை வழங்கி வருகிறது. ஏப்ரல் 14 ,2023 அன்று அறிமுகமான சிங்காரா சென்னை அட்டை மெட்ரோ பயணிகளிடம் பெரிதும் வரவேற்கப்பட்டது , இதுவரை மொத்தம் 3.89 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இந்த சிங்கார சென்னை அட்டை பெறுவதற்கு பயணிகளிடம் KYC சரிபார்ப்பு பதிவு தேவைப்பட்டிருந்தது.

இதனை மேலும் பயணிகளின் வசத்திற்காக KYC சரிபார்ப்பு இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது , பயணிகள் தங்கள் கைபேசி எண்ணை வழங்கி ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் உறுதிப்படுத்தினால், உடனுக்குடன் மெட்ரோ நிலையங்களில் சிங்காரா சென்னை அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இப்புதிய வசதி இன்று (30.10.2024) முதல் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் .அதனுடன் 20% தள்ளுபடியும் உண்டு. சிங்காரா சென்னை அட்டை சென்னை மெட்ரோ அல்லது பிற மெட்ரோக்களிலும் பயணத்தை எளிதாக்குவதோடு , மெட்ரோ நிலைய வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்தவும் உதவுகிறது. பயணிகளுக்கு விரைவான, எளிதான அனுபவத்தை சென்னை மெட்ரோ தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

மற்றும் பயணச்சீட்டு பெரும் முறைகளை பயணிகளின் வசதிக்காகவும் மாற்றி வருகிறது. மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

The post சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களுக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,Chennai Metro Railway Company ,Metro ,
× RELATED ரூ.3,657 கோடியில் 70 மெட்ரோ ரயில்கள்: BEML...