சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.