×
Saravana Stores

தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும் பிற்பகல் அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி (வியாழன்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர். ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, நவம்பர் 1-ம் தேதியும் ஏற்கனவே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Diwali festival ,Chennai ,Diwali ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,
× RELATED தீபாவளி பண்டிகை; சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!