- அமைச்சர் தங்கம்
- தென்திசை
- சென்னை
- அமைச்சர்
- தங்காணம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தெற்கு ஊராட்சி
- உலக சேமிப்பு தினம்
- தெற்கு
சென்னை : வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை அனைத்து தமிழக மக்களும் அஞ்சலகங்களில் துவங்க வேண்டுமென்று அமைச்சர் தங்கம் தென்னரசு உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி சிக்கனத்தை கடைபிடிப்பதை உலகச் சிக்கன நாள் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சேமிப்பும் சிக்கனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, வியர்வை சிந்தி நாம் ஈட்டும் வருவாயில் ஒரு சிறு பங்கை சேமித்தால், நாமும், நமது குடும்பமும் பயனடைவதோடு மட்டுமல்லாமல், நம் நாடும் பயனடையும். அதற்கு பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் நாம் அனைவரும் முதலீடு செய்து, நம் சந்ததியினருக்கும், பிறருக்கும் முன் உதாரணமாகத் திகழ வேண்டும்.
அய்யன் திருவள்ளுவர் அவர்கள்பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் ” குறிப்பிடுகிறார் என்றுஅதாவது ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராக மாற்றும் பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை என்பது இதன் பொருளாகும். தேனீக்கள் பூவிலிருந்து தேனை எடுத்து சேமிக்கின்றன. எறும்புகள் ஊர்ந்து சென்று மழைக்காலத்திற்காக தன் உணவைசேமிக்கின்றன. அது போல மனிதர்களும் சேமித்து சிக்கனமாக இருந்து வாழ்வில் செழிப்படைய வேண்டும். வாழ்க்கை பயணத்தை சிறப்பாகவும், வளமாகவும், பாதுகாப்பாகவும், எதிர்பாராதவிதமாக ஏற்படும் நிதி நெருக்கடிகளை சமாளிக்கவும் இந்த சிக்கனமும் சேமிப்பும் உதவிடும்.
வருமானத்திற்கு உட்பட்டு செலவு செய்து, சிக்கனமாக வாழ்ந்து, நமக்கும், நம் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே உலகச் சிக்கன நாள் வலியுறுத்துகிறது. பொருள் ஈட்டுவது மட்டும் மனிதனின் முக்கியமான கடமையல்ல. ஈட்டிய பொருளை திறம்பட பாதுகாப்பதுதான் மனிதனின் வாழ்க்கை நெறியாகும். வறுமை, பிணி மற்றும் சமூகக் கேடுகளை அழிக்கும் மாமருந்து சிறுசேமிப்பு ஆகும்.எனவே, “சிறுகச் சேமித்து, பெருக வாழ்” என்ற பொன்மொழிக்கிணங்க, மக்கள் அனைவரும் சேமித்து பயனடைய, வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை அனைத்து தமிழக மக்களும் அஞ்சலகங்களில் துவங்க வேண்டுமென்று இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை அனைத்து தமிழக மக்களும் அஞ்சலகங்களில் துவங்க வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் appeared first on Dinakaran.