×

46,931 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 14 முதலீடுகளுக்கு ஒப்புதல் : அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை : மின்னணு, பாதுகாப்பு, செல்போன் உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் 14
முதலீடுகள் வந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா அளித்த பேட்டியில், “46,931 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.38,600 கோடியில் 14 புதிய முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கிரீன் டிரெண்டிங் தொழிற்சாலை அமைக்கிறது. காஞ்சிபுரத்தில் பாக்ஸ்கானின் துணை நிறுவனமான யுசான் டெக்னாலஜி ரூ.13,180 கோடியில் ஆலை அமைக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 14 முதலீடுகளுக்கு ஒப்புதல் : அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Minister Thangam South ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Tamil ,Nadu ,Ministers ,Thangam Thanarasu ,D.R.P. ,Raja ,Minister Thangam ,South ,Dinakaran ,
× RELATED அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்;...