×
Saravana Stores

மேட்டூர் அணை நீர்மட்டம் 107.5 அடியாக உயர்வு

பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தணிந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம், 26 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 30,475 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 20,255 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 3,100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 106.48 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 107.54 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 74.95 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 107.5 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Bennagaram ,Cauvery ,Okanagan ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,094 கன அடியாக அதிகரிப்பு!