×
Saravana Stores

இன்று 3வது மகளிர் ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்தும் வரிந்துகட்டுகிறது

அகமதாபாத்: இந்தியா – நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

அகமதாபாத், மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 59 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில், நியூசிலாந்து 76 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்தியாவும் நியூசிலாந்தும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

The post இன்று 3வது மகளிர் ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்தும் வரிந்துகட்டுகிறது appeared first on Dinakaran.

Tags : 3rd Women's ODI ,India ,New Zealand ,Ahmedabad ,Women's 3rd ,Modi Stadium, Ahmedabad ,New Zealand Women's team ,Dinakaran ,
× RELATED தொடரை வென்றது இந்தியா: ஸ்மிரிதி மந்தனா அபார சதம்