தேவையானவை:
கேரட் துருவல், பால், சர்க்கரை – தலா 1 கப்,
ஏலக்காய் பொடி, நெய் – 2 ஸ்பூன்,
மைதா – 2 கப்,
உப்பு – சிறிது,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கேரட் துருவல், பால் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சிறு தீயில் கிளறவும். கெட்டிப் பதம் வந்ததும் ஏலக்காய், நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மைதாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சின்னச் சின்ன பூரிகளாகச் செய்து அதில் செய்து வைத்திருக்கும் கேரட்டை வைத்து மூடி, காய்ந்த எண்ணெயில் (அடுப்பை சிம்மில் வைத்து) சிங்கடாவைப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
The post கேரட் ஸ்வீட் சிங்கடா appeared first on Dinakaran.