×
Saravana Stores

லவங்க லத்திக்கா (மத்தியப்பிரதேசம்)

தேவையானவை:

மைதா – 2 கப்,
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை – 1 கப்,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன் லவங்கம் – 15,
பாதாம் (அ) முந்திரி துண்டுகள் – 15,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

பாதாம் (அ) முந்திரி துண்டுகளை சிறிது எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மைதாவில் வெண்ணெய், உப்பு கலந்து கெட்டியாக பிசையவும். (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கலாம்). சர்க்கரையை கம்பி பதத்துக்கு பாகு வைக்கவும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும். இதுதான் ஜீரா. மைதா கலவையில் சிறிது எடுத்து வட்டமாக இட்டு நாலாக மடித்து அழுத்தி விடவும். லவங்கத்தை நடுவில் குத்தி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தயாராக வைத்துள்ள ஜீராவில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து தட்டில் வைக்கவும். வறுத்த பாதாம் (அ) முந்திரி துண்டுகளை ஜீராவில் தோய்த்து லவங்கம் பக்கத்தில் வைக்கவும். ஆறியதும் இது ஒட்டிக் கொள்ளும்.

The post லவங்க லத்திக்கா (மத்தியப்பிரதேசம்) appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,
× RELATED மபியில் சரக்கு ரயிலின் பெட்டிகள் கழன்று விபத்து