×

மேட்டூருக்கு நீர்வரத்து 32,240 கனஅடியாக அதிகரிப்பு


பென்னாகரம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு 43 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 33 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும், 2வது நாளாக தடை நீடித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 29,021 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 32,240 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து பாசனத்துக்கு 1,300 கனஅடி திறக்கப்படுகிறது.

திறப்பை விட வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று முன்தினம் காலை 111.39 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 113.21 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.72 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.05 டிஎம்சியாக உள்ளது. இதே நிலையில் வரத்து இருந்தால் ஒரு வாரத்தில் மேட்டூர் அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மேட்டூருக்கு நீர்வரத்து 32,240 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Bennagaram ,Okanagan Cauvery ,Paris ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அனல்மின் நிலையத்தில்...