- திருமலா
- யூனியன்
- சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்
- ராம்மோகன் நாயுடு
- விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
- அமைச்சர்
திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று அளித்த பேட்டி: விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மிரட்டல் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அது யார்? இதன் பின்னணிகள் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் விமான சேவையை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக விமான பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும் பரிசீலனையில் உள்ளது. சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லக்கூடிய ஐயப்ப பக்தர்களுக்கு இரு முடியை தங்களுடன் விமானத்தில் கொண்டு செல்லும் விதமாக பாதுகாப்பு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
The post விமான பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.