சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களை முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்துவதால் என்ன பயிற்சி கிடைக்கிறது? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி சாராத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 54 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி சாராப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயிற்சிக்காக முதலமைச்சர் அலுவலகம், சபாநாயகர், அமைச்சர் அலுவலகங்களில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்னும் எத்தனை ஆசிரியர்கள் கல்வி சாராப் பணியில் உள்ளனர் என்பது பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
The post புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!! appeared first on Dinakaran.