×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி..!!

சென்னை: சாம்சங் நிறுவன ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. மாநில செயலளர் முத்தரசன் முதல்வரை சந்தித்தனர். விசிக தலைவர் திருமாவளவனும் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், தொழிலாளர்கள் மீதான நீதிமன்ற வழக்குகளை ரத்து செய்யக் கோரினோம் என்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறினர்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,MLA ,Samsung ,K. ,DIMUKA ALLIANCE PARTY ,DIMUKA ALLIANCE ,Marxist ,Balakrishnan ,
× RELATED ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை...