×

பருவமழையை எதிர்கொள்ள தயார்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

 

மதுரை, அக். 26: மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று பெய்த கனமழையினால் செல்லூர் கண்மாயில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து தீவிர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் கூறும்போது, ‘‘மதுரை மாநகராட்சி பகுதியில் மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீரை அகறற தேவையான இயந்திரங்கள், தளவாடபொருட்கள், பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அபாயம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு துரிதமான வகையில் வழங்கிட தேவையான உணவு, பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பேரிடர் கால பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது’‘ என்றார்.

The post பருவமழையை எதிர்கொள்ள தயார்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Corporation ,Sellur Kanmai ,Dinakaran ,
× RELATED மாடுகள் சாலைகளில் திரிந்தால் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு