- பெரம்பலூர்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- முதல் அமைச்சர்
- பெரம்பலூர் நகராட்சி
- சிப்காட் எறையூர்
- Padalur
- தொழிற்பூங்கா
- பெரம்பலூர் மாவட்டம்
- கொல்லித் ஆறு
- தின மலர்
சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம், 14,706 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 65,000 மக்கள் பயன்பெறுவர்.
இத்திட்டத்தினை ரூ.345.78 கோடியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடமிருந்து கடன், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் மானியம் ஆகிய நிதி ஆதாரங்களின் கீழ் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சி மற்றும் சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்கா ஆகியவற்றின் குடிநீர் தேவையை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் அமைகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
The post பெரம்பலூரில் ரூ.346 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.