சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது என்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியானது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளில் காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கி மொத்தம் 6,244 காலி இடங்கள் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 20 லட்சத்து 36 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்தனர்.
அதன் பிறகு காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி அதிகரித்து வந்தது. இதையடுத்து குரூப் 4 பணிகளுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 28ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்தாலோசித்து தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த ஓரிரு நாளில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு appeared first on Dinakaran.