×

பாடியநல்லூர் ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி: சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் ஆய்வு

புழல்: பாடியநல்லூர் ஊராட்சியில் புதியதாக அமைக்கப்படும் சிமென்ட் சாலை பணிகளை சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் நேரில் ஆய்வு செய்தார். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பிரதான சாலை மற்றும் 3வது தெரு, மொண்டியம்மன் நகர் அம்பேத்கர் தெரு, சிவகாமி அம்மையார் தெரு ஆகிய தெருக்களில் சாலைகள் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், மழைக்காலங்களில் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிறப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

எனவே, மேற்கண்ட தெருக்களில் புதிதாக சிமென்ட் சாலைகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவரும், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான வே.கருணாகரனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின்படி, தற்போது சேதமடைந்த சாலைகளை அகற்றிவிட்டு, புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு, அமைக்கப்படும் சிமென்ட் சாலைப்பணிகளை சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சிமென்ட் சாலைகளை தரமானதாக அமைக்கவும், விரைந்து பணி முடிக்கவும் உத்தரவிட்டார். ஆய்வின்போது ஒன்றிய கவுன்சிலர் சந்திரா வாசுதேவன், ஒன்றிய திமுக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பாடியநல்லூர் ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி: சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Padiyanallur Panchayat ,Cholavaram Union Committee ,Vice President ,Karunakaran ,Mahalakshmi Nagar ,road ,3rd street ,Mondiamman ,Senggunram ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...