×

எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள திருவேற்காட்டில் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்குள்ள கணக்கியல் மற்றும் நிதித் துறை, ஃபின்டெக் கிளப், சென்னை சமூகப் பணிப் பள்ளி ஆகியவை இணைந்து கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரிக் கலையரங்கில் நடத்தின.

இதில் சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி விகல் சுக்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அவர் பல்வேறு வகையான போதைப் பொருட்களையும், போதைப் பொருளால் பாதிக்கப்பட்ட நபர்களின் ஆபத்தான புள்ளிவிவரங்களையும் எடுத்துரைத்து, போதைப் பொருட்களால் ஏற்படும் தீங்குகளை பற்றியும் பட்டியலிட்டார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும், சென்னை சமூகப் பணிப் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : SA College of Arts and Science ,SA Arts and Science College ,S.A. ,Tiruvekkat ,Poontamalli Avadi Highway ,College of Arts and Science ,Accounting and Finance Department ,Fintech Club ,Chennai ,SA College of Arts and Sciences ,
× RELATED எஸ்.ஏ. கல்லூரியில் சர்வதேச திரைப்பட விழா