- போல்டர்
- டோரே பான் பசிபிக் ஓபன்
- டோக்கியோ
- இங்கிலாந்து
- கேத்தி போல்டர்
- டோரே பான் பசிபிக் ஓபன்
- தின மலர்
டோக்கியோ: டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை கேத்தி போல்ட்டர் தகுதி பெற்றார். காலிறுதியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவுடன் (24 வயது, 159வது ரேங்க்) நேற்று மோதிய போல்ட்டர் (28 வயது, 33வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
மற்றொரு காலிறுதியில் சீனாவின் கின்வென் ஸெங் (22 வயது, 7வது ரேங்க்) 6-0, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸை (22 வயது, 35வது ரேங்க்) வீழ்த்தினார். ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (27 வயது, 9வது ரேங்க்) மோதிய அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் (25 வயது, 26வது ரேங்க்) 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். ரஷ்யாவின் டயானா ஷ்னெய்டருடன் (20 வயது, 16வது ரேங்க்) மோதவிருந்த ஜப்பான் வீராங்கனை சயாகா இஷி (19 வயது, 279வது ரேங்க்) காயம் காரணமாக விலகியதை அடுத்து, டயானா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் கெனின் – போல்ட்டர், கின்வென் – டயானா மோதுகின்றனர்.
The post டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் போல்ட்டர் appeared first on Dinakaran.