×
Saravana Stores

வீடியோ பதிவை பார்த்து துணை முதல்வர் உத்தரவு தாம்பரம் கஸ்பாபுரம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம்தென் ஊராட்சி, கஸ்பாபுரம், கிருஷ்ணா நகர், கணேஷ் நகர் பிரதான சாலையில் கடந்த 14, 15ம்தேதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அந்த வீடியோ பதிவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டேக் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் அப்பகுதியில் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது. 4 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக கஸ்பாபுரம் பகுதிக்கு கடந்த 16ம்தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அப்போது இப்பகுதியில் மழைநீர் நிரந்தரமாக தேங்காத வகையில் அகரம் ஏரிக்கு மழைநீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்க திட்டம் தயாரித்து மதிப்பீட்டை அனுப்புமாறு செங்கல்பட்டு கலெக்டருக்கு உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார். இதனால் கடந்த சில நாட்களாக தாம்பரம் வருவாய் துறையினர் கால்வாய் ஆக்கிரமிப்பை அளவீடும் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பபை அகற்றினர்.

பதுவாஞ்சேரி பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர் இந்த கால்வாய் வழியாக கஸ்பாபுரம் தாங்கல் ஏரிக்கு சென்று அங்கிருந்து அகரம் ஏரிக்கு செல்லும் வகையில் ஏற்கனவே நீர் வழித்தடம் உள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் கால்வாய் வழியாக ஏரிக்கு எளிதில் செல்ல வழிவகை செய்யப்பட் டுள்ளது. கஸ்பாபுரம் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு இருப்பதால் அவற்றையும் அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அந்த ஆக்கிரமிப்பும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை துணை முதலமைச்சர் ஆய்வுக்கு பின்னர் நிறைவேறி இருப்பது அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post வீடியோ பதிவை பார்த்து துணை முதல்வர் உத்தரவு தாம்பரம் கஸ்பாபுரம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Tambaram Kaspaburam ,Tambaram ,Aharamden Oratsi ,Kaspapuram ,Krishna Nagar ,Ganesh Nagar ,Thambaram Assembly Constituency ,Tambaram Kashapuram ,
× RELATED பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய...